என்னுரை
உலகின் ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு பிரச்சினை விதம் விதமாக உருவாகிக்கொண்டே இருக்கின்றது. அனுபவசாலிகள் தப்பித்துக் கொள்ளுகின்றார்கள். அனுபவமர்றோர் மனம் உடைந்து போகின்றார்கள் அல்லது தம்மைத் தாமே மாய்த்துக் கொள்ளுகின்றார்கள்.
புலம்பெயர் மக்கள் வேறுபட்ட கலாச்சாரம், பல்வேறுபட்ட இனத்தவர்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், மறைமுகமாக மறைந்தே போகாது. அதன் பாதிப்புக்களை வெளிக்கொண்டு வருவதன் மூலம் பலரைப் பாதிப்பில் இருந்து நீக்கலாம் என்று கருதி, புலம்பெயர்வாழ்வியல் இலக்கியமாக இவ்வாறான குறும் நாவல்களை எழுதிக் கொண்டிருக்கின்றேன். இதன் மூலம் தெரியாத பல நிகழ்வுகள் பலருக்குப் பாடமாக அமையும்.
அந்த வகையிலேயே இம் முடிவைச் சொல்லிவிடு என்னும் குறுநாவலும் ஒரு பாடமாக அமைகின்றது
Feedback/Errata